×

திருச்செங்கோடு அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்

திருச்செங்கோடு, மார்ச் 18: திருச்செங்கோடு அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்செங்கோடு  அருகே பழைய புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(45). இவரது மகன் கலையரசு(16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார்  பள்ளியில்  10ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 16ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு புறநகர்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : student ,school ,Tiruchengode ,
× RELATED மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை கொலை செய்ததாக பள்ளி மாணவர் கைது