×

காவல் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

திருச்செங்கோடு, மார்ச் 18: திருச்செங்கோடு காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அருளரசு உத்தரவின்பேரில் திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட திருச்செங்கோடு நகரம், புறநகர்,  அனைத்து மகளிர் காவல் நிலையம்,  மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம், மொளசி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்கள்  கைகளை நன்கு  கழுவிய பின்னரே காவல் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக காவல்நிலையத்தின் முன்பகுதியில் தண்ணீர், சோப்பு, டெட்டால் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் கொரோனா  தடுப்பு நடவடிக்கையை டிஎஸ்பி சண்முகம் துவக்கி வைத்தார். அப்போது, இன்ஸ்பெக்டர் தங்கவேல் உடனிருந்தார்.

Tags : police stations ,
× RELATED கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சாதனம்...