×

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்த கட்டிடம்

திருச்செங்கோடு, மார்ச் 18: பால் வள மானிய கோரிக்கை மீது பரமத்தி வேலூர் எம்எல்ஏ மூர்த்தி சட்டப்பேரவையில் பேசியதாவது: எனது தொகுதியான பரமத்திவேலூரில் அமைந்துள்ள மோகனூர் மாடகாசம்பட்டி ராசாம்பாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் 1974ல் ஆரம்பிக்கப்பட்டு 250 உறுப்பினர்களுடன் உள்ளது. தினசரி  சுமார் 300 லிட்டர் பாலை வழங்குகிறது. இந்த சங்கம் ₹500 வாடகையில் தனியார்  கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு பால்வளத்துறை சார்பில் சொந்தமாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும், தமிழகம் முழுக்க சிறப்பாக செயல்படும் பால்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை கணக்கெடுத்து சொந்த கட்டிடம்  கட்டித்தர அரசு முன் வர வேண்டும்  என்றார்.

இதற்கு பதிலளித்து பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது:ராசாம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு சங்கத்திற்கு கட்டிட நிதி ₹1 லட்சத்து 20 ஆயிரத்து 670 உள்ளது. ₹50470 நிகர லாபம் பெற்று வருகிறது. இந்த  சங்கத்திற்கு சொந்தமாக அடிமனை ஏதும் இல்லாத காரணத்தால் சொந்த கட்டிடம் கட்டித்தர சாத்தியக்கூறு இல்லை. அருகில் உள்ள 400 சதுர அடி நிலம் போதாது. ஆகவே, எம்எல்ஏ மாவட்ட நிர்வாகத்திடம் கூறி நிலம் பெற்றுத் தந்தால் அந்த இடத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பால்வளத்துறை மூலமே சொந்த கட்டிடம்  கட்டித்தரப்படும் என்றார்.

Tags : building ,Dairy Producers Cooperative Society ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி