×

திருச்செங்கோட்டில் 25 லட்சத்திற்கு எள், பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, மார்ச் 18:திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர்  முறையில் நடந்தது. சின்னசேலம், ஆத்தூர் , கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசீபுரம, வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. ரகசிய டெண்டர் முறையில் இந்த எள் 20.50  லட்சத்திற்கு விற்பனையானது.சிவப்பு எள் கிலோ 105.70 முதல் 130.60  வரையிலும், கருப்பு எள் கிலோ 107.90 முதல் 132.60 வரையிலும் விலை போனது. வெள்ளை எள் 101.90 முதல் 124.80 வரையிலும் விற்பனையானது.

இதேபோல், 300 மூட்டை பருத்தி 4.5 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர் , புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள்  கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் 4610 முதல் 5206 வரையிலும் விலை போனது.

Tags : cotton auction ,Thiruchengode ,
× RELATED லாரி-சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி