×

பஸ் ஏறும்போது நகை இருந்த கைப்பை மாயம்

பொள்ளாச்சி, மார்ச் 18: கோவை அருகே சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி சுகன்யா (28). இவர், நேற்று முன்தினம், தனது குடும்பத்துடன் ஆனைமலை அருகே உள்ள ஒரு கோயிலுக்கு செல்வதற்காக, பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் நின்ற ஒரு பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த கைப்பையை மாயமானது. அந்த பையில், 3 பவுன் நகை மற்றும் ஏடிஎம் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பான்கார்டு மற்றும் ரூ.900 இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா, தன்னுடன் வந்த உறவினர்களுடன் சேர்ந்து பஸ் மற்றும் அருகே உள்ள கடை என பல இடங்களில் தேடினார். ஆனால், நகை இருந்த கைப்பை கிடைக்கவில்லை. இதையடுத்து, மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் சுகன்யா புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED 10 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட நகையை கண்டு பிடித்த 6 வயது சிறுவன்...