×

போச்சம்பள்ளியில் திமுக உட்கட்சி தேர்தல் விருப்ப மனு

போச்சம்பள்ளி, மார்ச் 18:போச்சம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக உட்கட்சி கிளை தேர்தலுக்கான மனுக்கள் பெறப்பட்டது.  
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.  மாநில வர்த்தக அணி செயலாளரும்,மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான கவிஞர் காசி முத்துமாணிக்கம் கலந்து கொண்டு ஒன்றியத்தில் உள்ள 307 கிளைக்கான மனுக்களை பெற்றார்.

இந்நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ரஜினிசெல்வம், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, தேர்தல் ஆணையாளர்கள் மதி, சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,UDC ,Pochampally ,
× RELATED சொல்லிட்டாங்க...