×

ஓசூர் பூ மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்

ஓசூர், மார்ச் 18:ஓசூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு ப்ளவர் அசோசியேசன் சார்பில் இலவச மாஸ்க் வழங்கப்பட்டது. ஓசூர் மாநகரம் 3 மாநில எல்லை பகுதியில் உள்ளதால், ஓசூர் பூ மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா பீதியால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு ப்ளவர் அசோசியேசன் சார்பில் மாஸ்க்குகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து ப்ளவர் அசோசியேசன் செயலாளர் மூர்த்திரெட்டி கூறும்போது, பொது மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1000 பேருக்கு மாஸ்க்குகளை இலவசமாக வழங்கியுள்ளோம். ஓசூரில் மாஸ்க் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ₹5க்கு விற்கப்பட்ட மாஸ்க் தற்போது 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசு இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : public ,Hosur Flower Market ,
× RELATED மாஸ்க் அணியாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்