×

கொரோனா விழிப்புணர்வு பேரணி

போச்சம்பள்ளி, மார்ச் 18:மத்தூர் ஒன்றியம், ஒட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமை வகித்தார். மத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. கணித ஆசிரியர் பழனி நன்றி கூறினார்.

Tags : Corona ,awareness rally ,
× RELATED கொரோனாவால் சாவு உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு