×

வழக்கில் ஆஜராக சம்மன் கொடுக்கச்சென்ற எஸ்ஐயை திட்டிய வாலிபர் கைது

சேந்தமங்கலம், மார்ச் 18: நாமக்கல் அருகே எஸ்எஸ்ஐயை பணி செய்ய விடாமல் தகாத வார்த்தையால் திட்டிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(30). எம்எஸ்சி பிஎட் பட்டதாரியான இவர், அப்பகுதி மக்களிடம் கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன்பேரில், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஆஜராகுவதற்கான சம்மனை எடுத்துக்கொண்டு நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கோடீஸ்வரனிடம் கொடுக்க சென்றுள்ளனர். அப்போது, சம்மனை பெற்றுக்கொள்ள மறுத்து கோடீஸ்வரன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, புதுச்சத்தரம் போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிந்து பட்டதாரி கோடீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றார். பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : plaintiff ,SI ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...