×

543 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.33 கோடியில் நல உதவி

திருச்சி, மார்ச் 16: மாற்றுத்திறனாளிகள் 543 பேருக்கு ரூ.1.33 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி ஜோசப் கல்லூரியில் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: 543 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,33,08,074 மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற திட்டங்கள் மூலம் நல திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார். அமைச்சர் வளர்மதி பேசுகையில், ‘மாவட்டத்தில் நான்கு வகையான திட்டத்தின் கீழ் ரூ.31.34 லட்சம் மதிப்பில் 399 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர்.

2019-20 ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் 20 லட்சம் மதிப்பில் 26 பேருக்கு திருமண நிதியுதவி வழங்கப்படவுள்ளது. சுயவேலைவாய்ப்பு வங்கிக்கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் 508 பேருக்கு ரூ.27 லட்சம் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழுத்தலைவர் பரமசிவம், இளநிலை மறுவாழ்வு அலுவலர் உலகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : persons ,
× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி