×

அமைச்சர் பேச்சு கோவை இன்ஜி., கல்லூரியில் படித்த போதிலிருந்து திருச்சி மாணவிக்கு லவ் டார்ச்சர் நெல்லை வாலிபர் மீது வழக்கு

திருச்சி, மார்ச் 16: திருச்சி சுப்பிரமணியபுரம் வள்ளுவர் வீதி 2வது தெருவை சேர்ந்தவர் மோனிஷா சிவகாமி (25). இவர் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த நெல்லையை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் வாசுதேவன் என்பவர் மோனிஷாவுக்கு எஸ்எம்எஸ் மூலம் காதலிக்கச் சொல்லி மெசேஜ் அனுப்பி டார்ச்சர் கொடுத்து வந்ததாக தொிகிறது. மோனிஷா மறுத்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மோனிஷா திருச்சி வந்து விட்டார். அதன் பின்பும் வாசுதேவன், மோனிஷாவுக்கு செல்போனில் காதல் டார்ச்சர் கொடுத்து வந்தார். மேலும் போலியாக தனக்கும், மோனிஷாவுக்கும் திருமணம் என்பது போல் திருமண பத்திரிகை தயாரித்து, அதை வாட்ஸ்அப் மூலம் மோனிஷாவுக்கு அனுப்பினார்.  வாசுதேவனின் அழிச்சாட்டியம் அதிகரித்ததால் நொந்துபோன மோனிஷா இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வாசுதேவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Love Talker Paddy Lawyer ,Trichy Student ,
× RELATED சர்வதேச சிலம்பாட்ட போட்டி திருச்சி மாணவ, மாணவிகள் தங்கம் வென்று சாதனை