×

திருச்சுழி அருகே உள்ளாட்சி தேர்தல் முன்பகை பெண்ணுக்கு அடி-உதை

திருச்சுழி, மார்ச் 17: திருச்சுழி அருகே உள்ளாட்சி தேர்தல் முன்பகை காரணமாக பெண்ணுக்கு அடி உதை விழுந்தது.திருச்சுழி அருகே உள்ள சலுக்குவார்பட்டி ஊராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் கல்லுபட்டியைச் சேர்ந்த சித்ராதேவியும், அதே ஊரைச்சேர்ந்த மகாலட்சுமியும் போட்டியிட்டனர். இதில் சித்ராதேவி தேர்தலில் வெற்றிபெற்றார். வார்டு உறுப்பினராக போட்டியிட்டு பழனி வெற்றிபெற்ற நிலையில், போட்டியின்றி துணைத் தலைவர் பதவி ஏற்றார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முன்பகை காரணமாக அவ்வப்போது சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சிலதினங்களுக்கு முன்பு கல்லுபட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் காதணிவிழா நடத்தியுள்ளார். அப்போது சித்திராதேவி தரப்பைச் சேர்ந்த பழனி மற்றும் கோபால் ஆகிய இருவரும் மகாலட்சுமி தரப்பைச் சேர்ந்த பிள்ளையார் என்பவரை தாக்கியதாகவும், இதுசம்மந்தமாக பழனி மற்றும் கோபால் ஆகிய இருவரையும் ம.ரெட்டியபட்டி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கோபால் மனைவி செல்வராணி (29) ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பருத்தி காட்டிற்கு சென்றபோது கல்லுபட்டியைச் சேர்ந்த ரமேஷ், பால்ராஜ், பாண்டியம்மாள் உள்பட ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறி ம.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிபடையில் தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : elections ,Tiruchi ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...