×

மேலூர் அருகே நெஞ்சு வலியால் வேன் டிரைவர் சாவு

மேலூர், மார்ச் 17: வேனை ஓட்டி வந்த டிரைவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சாலையோரத்தில் வேனை நிறுத்தியவர் பலியானார்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த வேன் டிரைவர் குணசேகரன். நாமக்கல்லில் இருந்து சரக்கை ஏற்றிக் கொண்டு மதுரை சென்றார். அங்கு சரக்கை இறக்கிய அவர் நேற்று மேலூர் நான்கு வழிச்சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தார். கொட்டாம்பட்டி பள்ளப்பட்டி அருகில் சென்ற போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.இதனால் வேனை ரோட்டோரமாக நிறுத்திய அவர் அப்படியே உயிரிழந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொட்டாம்பட்டி போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Van ,Melur ,
× RELATED மனைவியுடன் தொடர்பு வைத்ததால்...