×

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் திமுக கிளை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்

மேலூர், மார்ச் 17: கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளுக்கான திமுக கிளை கழக தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று நடைபெற்றது. மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளின் திமுக கிளை கழக நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று நடைபெற்றது. கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேர்தல் பார்வையாளராக மகேஷ் தலைமையில் பார்வையாளர்கள் வெங்கடேசன், சேகர், தனசெல்வம், நேருபாண்டியன் பங்கேற்றனர்.

மேலும் கொட்டாம்பட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் துரை புகழேந்தி, ஒன்றிய கவுன்சிலர் அப்பாஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, துணைச்செயலாளர் குமரேசன், பாபு, கொட்டாம்பட்டி ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் அசாரூதீன் உட்படபலர் கலந்து கொண்டனர்.

Tags : branch election ,DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...