×

பேரையூரில் அச்சுறுத்திய மரம் அகற்றம்

பேரையூர், மார்ச் 17: பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 ஆண்டுகளாக பட்டுபோய் அச்சுறுத்தி வந்த மரம் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.பேரையூர் பஸ்நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்லும் நுழைவுவாயில் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 3 ஆண்டுகளாக ஒரு வேப்பமரம் பட்டுப்போய் ஒடிந்து விழும் நிலையில் இருந்தது.

இதனால் சுகாதார நிலையம் வரும் கர்ப்பிணிகள், பெண்கள், பஸ்சில் செல்லும் பயணிகள், அவ்வழியே நடந்து செல்பவர்கள் அச்சப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, உசிலம்பட்டி ஆர்டிஓ ராஜ்குமார், உடனடியாக பட்டமரத்தை அகற்ற பேரூராட்சி செயல் அலுவலர் வைரக்கண்ணுவிற்கு உத்தரவிட்டாார். இதனைத்தொடர்ந்து நேற்று பட்டமரம் முற்றிலும் அகற்றப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் உசிலம்பட்டி ஆர்டிஓ, பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தினகரன் நாளிதழுக்கு நன்றி கூறினர்.

Tags : Peraiyur ,
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது