×

ராஜாக்கூரில் கொரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு

மதுரை, மார்ச் 17: கொரோனா வைரஸ் பாதித்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த ராஜாக்கூர் அருகே முகாம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கொரோனா வைரஸ்தொடர்பாக தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 விமான நிலையங்களிலும், வெளிநாட்டில் இருந்து பயணிகள் வருகின்றனர். சில நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை, மத்திய அரசு தடை செய்துள்ளது. எனினும், அந்நாடுகளில் இருந்து இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால் தேவைக்கேற்ப, அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி, 14 நாட்கள் தனிப்பப்படுத்தி, கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை விமான நிலையம் அருகே முகாம் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மதுரையில் கருப்பாயூரணி அருகே உள்ள ராஜாக்கூரில் அரசு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முழுமையாக முடிந்து கட்டிடங்களை அரசிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த இடத்தில் கொரோனா முகாம் அமைக்க நேற்று அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆனால், அங்குள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு முகாம் அமைக்கக் கூடாது என கலெக்டர் வினாயிடம் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களை சரி செய்து முகாமை அங்கு அமைக்க பஞ்யாத்து தலைவருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ராஜாகூர் மக்கள் கூறுகையில்,’ கொரோனா முகாம் அமைக்க அதிகாரிகள் நேற்று ராஜாகூரில் பார்வையிட்டனர். ஆனால் பொதுமக்கள் அதிகமாக உள்ள இந்த இடத்தில் முகாம் அமைக்க கூடாது. எங்களுக்கு அந்த பாதிப்பு வந்ததால், அதிகாரிகள் உதவி செய்ய வாய்ப்பில்லை. எனவே, இந்த முகாம் அமைக்க கூடாது, அவ்வாறு அமைத்தால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

Tags : camp ,Corona ,Rajkot ,
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...