×

சிறப்பு ஊராட்சி கூட்டம்

வருசநாடு, மார்ச் 17: வருசநாடு அருகே, சிங்கராஜபுரம் கிராமத்தில் சிறப்பு ஊராட்சி கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலர் ராமசாமி சிறப்புரையாற்றினார். இதில், அனைத்து வார்டு உறுப்பினர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் சிங்கராஜபுரம் ஊராட்சியில் ஏற்கனவே மலைக் கிராமங்களுக்கு வந்து நின்ற அரசு பஸ்சை மீண்டும் வருவதற்கும், சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து மலை கிராமங்களிலும் மண்சாலை திட்டத்தை தார்ச்சாலை திட்டமாக மாற்றவும், கடமலைக்குண்டு, வருசநாடு, வாலிப்பாறை, சிங்கராஜபுரம் வழியாக மீண்டும் அரசு பஸ்ரூட் வழங்கவும், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திடவும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Panchayat Meeting ,
× RELATED விராலிபட்டியில் முதல் ஊராட்சி கூட்டம் வைகை நீரை கொண்டு வர கோரிக்கை