×

யானை பாதுகாப்பு பயிற்சி முகாம்

சின்னமனூர், மார்ச் 17: சின்னமனூர் வனப்பகுதியில் வாழும் யானைகளை பாதுகாக்கும் முறை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தேனி மாவட்ட வனஉயிரின காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராம் அறிவுறுத்தல்படி சின்னமனூர் வனத்துறை அலுவலகத்தில், ஹைவேவிஸ் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் யானைகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு சின்னமனூர் ரேஞ்ஜர் கர்ணன் தலைமை வகித்தார். டிரஸ்ட் இயக்குநர் சவுந்திரராஜன், கம்பம் கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ‘ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன் மெட்டு, இரவங்கலாறு என 7 மலைக்கிராமங்கள் மற்றும் வனவிலங்கள் ஏராளமாக உள்ளன. இதில் திரியும் யானைகளை பாதுகாக்கும் விதம், யானைகளுக்கு கோடிக்கணக்கில் இன்சூரன்ஸ் செய்யபட்டிருப்பதால், யானை தாக்கி உயிரிழக்கும் மனிதனுக்கு ஒரு லட்சம் நிதி அரசு வழங்குகிறது’ என்றனர்.

மேலும், யானைகள் மேலாண்மை குறித்து தொழில் நுட்பபயிற்சி,வனத்திற்குள் வாழும் பாம்பு, பல்லி, பறவை, குரங்கு, சிறுத்தை, கரடி, யானைகள், காட்டுமாடுகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் விதம், அந்த விலங்கினங்களின் மதிப்பீடு செய்து, அறிக்கை தாக்கல் செய்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இம்முகாமில் வனவர்கள், வனகாப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், தற்காலிக தீயணைப்பு காவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Elephant Protection Training Camp ,
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...