×

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மனு

சிவகங்கை, மார்ச் 17: காரைக்குடியில் நகர்ப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்குடி நகர்ப்பகுதியில் வ.உ.சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, வாட்டர் டேங்க் எதிரில் உள்ள கடை, வியாழக்கிழமை சந்தை அருகே உள்ள கடை, தனியார் மருத்துவமனை அருகே உள்ள கடை என நகர்ப்பகுதியில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமாக செல்கின்றனர். இங்குள்ள டாஸ்மாக் கடைகளால் பெண்கள், பொதுமக்கள், பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

குடித்துவிட்டு ஆபாசமாக பேசுவது, கத்தியை காட்டி மிரட்டுவது, போதையில் சாலைகளில் படுத்திருப்பது என பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மது விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : task force shops ,
× RELATED நிவாரண உதவி வழங்க அரசு மேற்கொள்ள...