×

பிள்ளையார்பட்டி கோயிலில் இன்று முதல் சிறப்பு வழிபாடுகள் ரத்து

திருப்புத்துார், மார்ச் 17:  திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்பன், பழ.பழனியப்பன் அறிவித்துள்ளனர். ‘‘தற்போது நிலவும் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இன்று முதல் வரும் 31 வரை கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல் நித்ய வழிபாடுகள் மட்டும் தொடரும். காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினரின் ஆலோசனைபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் கோயிலில் நடைபெறும் கணபதிஹோமம்,அபிஷேகம் போன்றவை நடைபெறாது.

Tags : Pillaiyarpatti ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும்...