×

ஸ்டாலின் பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டியில் வெற்றி வீரர்களுக்கு பரிசு

ராமநாதபுரம், மார்ச் 17: ராமநாதபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி சார்பாக திருப்புல்லாணி ஒன்றியத்தில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும் நடந்தது. ஒன்றிய செயலாளர் புல்லாணி முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பவானி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, வர்த்தக அணி துணை செயலாளர் கிருபானந்தன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜீவானந்தம், சண்முகம், நகர செயலாளர் பஷீர்அகமது, விவசாய தொண்டரணி அமைப்பாளர் மாயகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சம்பத் ராஜா, குமரகுரு, ரமேஷ் கண்ணா, கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய துணைச் செயலாளர் புகழேந்தி, விவசாய அணி பிரவீன் தங்கம் ஆகியோர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பையும், ரொக்க பணமும் வழங்கினர்.

Tags : Stalin ,Birthday Party Cricket Prize Winners ,
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...