×

கீழக்கரை அருகே திமுக கிளை கழக தேர்தல்

கீழக்கரை. மார்ச் 17: திருப்புல்லாணி ஒன்றிய திமுக கிளை கழக தேர்தலுக்கு வேட்பு மனுக்களை பெறும் நிகழ்ச்சி கீழக்கரை அருகே உள்ள வேளானூரில் நடைபெற்றது. தேர்தல் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி ஆகியோரின் நேரடி பார்வையிலும். ஒன்றிய செயலாளர் புல்லாணி. வேளானூர் ஊராட்சி செயலாளர் சிவனாண்டி. ஒன்றிய பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மலைராஜ், ஊராட்சி ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி வள அமைப்பாளர் அய்யாச்சாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,branch election ,Kilakarai ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...