×

பரமக்குடி அரசு கல்லூரியில் நிர்வாக வளர்ச்சி குறித்த கருத்தரங்கு

பரமக்குடி, மார்ச் 17: பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் நிர்வாக வளர்ச்சி மற்றும் முன் உதாரணங்கள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் நிர்வாக மேலாண்மை துறை சார்பாக நிர்வாக வளர்ச்சி மற்றும் முன் உதாரணங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பூரணச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக நிர்வாக மேலாண்மை துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக நிர்வாக மேலாண்மை துறை தலைவர் ஜோசப் பால்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிர்வாகத்தில் தற்போது உள்ள வளர்ச்சி மற்றும் முன் உதாரணங்கள் குறித்து  பேராசிரியர்கள் துரைக்கண்ணன், வீரசெல்வம்,,தினேஷ் பாபு , ஜான் அடைக்கலம் ஆகியோர் நாட்டில் தற்போது உள்ள நிர்வாக வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தனர். இரண்டு பட்டறைகளாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டு, 50 ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் அழகப்பா, மதுரை காமராஜர்,எஸ்.ஆர்.எம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மற்றும் அரசு, சுயநிதி கல்லூரிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பி.எச்.டி, ஆராய்ச்சி மாணவர்கள்  கலந்து கொண்டனர். ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி துறைத்தலைவர்கள் மணிமாறன், சிவக்குமார், கணேசன், விஜயகுமார், ரேணுகாதேவி, ஆஷா,மோகன கிருஷ்ணவேணி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் உதவி பேராசிரியர் கோபிநாத் நன்றி கூறினார்.

Tags : Seminar on Administrative Development ,Paramakudi Government College ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் முதல்கட்ட மாணவர் சேர்க்கை துவக்கம்