×

குடிநீர் பற்றாக்குறையை உடனே தீர்க்க வேண்டும் ஊராட்சி தலைவர்கள் கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம், மார்ச் 17: ராமநாதபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் தலைவர் அப்துல்மாலிக், செயலாளர் நாகரெத்தினம், பொருளாளர் சசிகலா லிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் இதர அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும். எதிர்வரும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை தீர்க்க அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் உரிய நேரத்தில் குடிநீர் கிடைக்க செயல்பட வேண்டும்.

தற்போது மாவட்ட அளவில் ஊராட்சிமன்ற தலைவர்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்புக்கு இதில் உடன்பாடு இல்லை. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிமன்ற தலைவர் கூட்டமைப்பு தனித்தே செயல்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து ஊராட்சிமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர். கவுரவ தலைவர் சாந்தி சாத்தையா நன்றி தெரிவித்தார்.

Tags : Panchayat leaders ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...