×

பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர், மார்ச் 17: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று யோக பைரவர் சன்னதியில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளையும், வேண்டுதலையும் பூசணி காய், தேங்காய்களில் விளக்கேற்றியும் மற்றும் நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். பகல் 12 மணியளவில் யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து யோக பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருப்புத்தூரைச் சுற்றியுள்ளவர்களும், வெளி மாவட்டத்திலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Tags : Teybray Ashtami ,worship ,Bhairav Temple ,
× RELATED சிவாலயங்களில் சங்கு பூஜை