×

நகையுடன் வாலிபரின் பேக் திருட்டு

மதுரை, மார்ச் 17: 4 பவுன் நகையுடன் வாலிபரின் பேக்கை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரைச் சேர்ந்தவர் ராகுல்(32). இவர் கடந்த 14ம் தேதி மாட்டுத்தாவணியில் திருப்புத்தூருக்கு செல்ல அரசு பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் பஸ்சில் பேக்கை வைத்து விட்டு கீழே இறங்கி, கடையில் டீ குடித்து விட்டு மீண்டும் பஸ்சுக்கு வந்தார்.

அப்போது அவர் வைத்திருந்த பேக்கை காணவில்லை. 4 பவுன் நகையுடன் பேக் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் பேக்கை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Theft ,plaintiff ,
× RELATED புதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில்...