×

எய்ம்ஸ் விரிவாக்கத்திற்காக பிடுங்கி நடப்பட்ட மரங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?

திருப்பரங்குன்றம், மார்ச் 17: எய்ம்ஸ் மருத்துவமனை சாலை விரிவாக்க பணிகளுக்காக தோப்பூரில் பிடுங்கி நடப்பட்ட மரங்கள் கோடை வெயிலில் கருகி வருகின்றன. இந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக பராமரிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூர் பகுதியில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை சாலை விர்வாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏற்கனவே சாலையின் ஓரத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் கிளைகள் வெட்டப்பட்டு வேறோடு பிடுங்கி புதிய சாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் நடப்பட்டன. நெடுஞ்சாலை துறையினரின் இந்த முயற்சி அப்போது பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த மரங்கள் தற்போது கோடைவெயில் காரணமாக வறண்ட நிலையில் உள்ளது. ஒரு சில மரங்கள் மட்டும் துளிர்விட்டு வளர்கிறது. எனவே, இந்த மரங்களுக்கு முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : expansion ,AIIMS ,
× RELATED அந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்