×

மதுரை அரசு மருத்துவமனையில் தயாராகிறது கொரோனா தனி வார்டு டீன் பேட்டி

மதுரை, மார்ச் 17: மதுரை அரசு மருத்துவமனையில் நுரையீரல் பிரிவில் செயல்பட்டு வரும் கொரோனா வார்டை தனி வார்டாக மாற்றும் பணி துவங்கியுள்ளது. 15 நாட்களுக்குள் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக டீன் சங்குமணி தெரிவித்தார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையை பொருத்தவரை, அரசு மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தினந்தோறும் ஏராளமான வெளிநோயாளிகள் வருவதால், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை கண்டறிய தாமதம் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் இருமினாலோ, தும்மினாலோ இந்த வைரஸ் தொற்று பரவிவிடும் என்பதால், இந்த கொரோனா பிரிவை தனிக்கட்டிடத்திற்கு ெகாண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.இதன்படி, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய செவிலியர் கல்லூரி கட்டித்தில், தேவையான மாற்று கட்டமைப்பை ஏற்படுத்தி, இந்த வார்டை கொரோனா வார்டாக மாற்ற அனுமதி பெறப்பட்டது. இந்த விடுதியை மேம்படுத்தி, தயார் செய்யும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை டீன் சங்குமணி, மருத்துவக்கண்காணிப்பாளர் ஹேமந்த்குமார், நிலைய மருத்துவ அதிகாரி ரவீந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து டீன் சங்குமணி கூறுகையில், ``ஏற்கனவே நுரையீரல் சிகிச்சை பிரிவில் , கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 படுக்கைகளுடன் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவிற்காக, செவிலியர் விடுதி இயங்கி வந்த பழைய கட்டிடம் விரிவாக்கப்பட்டு, தனி வார்டு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 15 தினங்களுக்குள் பணியை முடிக்கும்படி கேட்டுக்ெகாள்ளோம். இந்த வார்டு தயாரானவுடன், கொரோனா அறிகுறிகளுடன் யார் வந்தாலும் பரிசோதனை செய்யப்படும், தேவை ஏற்பட்டால், வார்டில் அனுமதிக்கப்படுவர்’’ என்றார்.

Tags : Teen ,Corona Solid Ward ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது