×

மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு மூலிகை சாம்பிராணி புகை

புதுச்சேரி, மார்ச் 17: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் இருவேளையும் சிறப்பு சாமிபிராணி புகை போடப்படுகிறது. மேலும் குருக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விழாக்கள், பொதுக் கூட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும்படி கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் சுற்றுலா தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் கோவிலுக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் புதுச்சேரியில் விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ள சில வெளிநாட்டு பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு மணக்குள விநாயகர் கோயிலில் காலை, மாலை இருவேளையும் சிறப்பு மூலிகை சாம்பிராணி புகை போடப்படுகிறது.
கிருமிகளை அழிக்கும் நடவடிக்கையாக ஒருமணி நேரத்திற்கு மேலாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கோயில் குருக்கள் தங்கள் கையால் பக்தர்கள் நெற்றில் விபூதி இடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. விபூதி, குங்கும பிரசாதத்தை கையில் வழக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. அவர்கள் எப்போதும் போல வழக்கமாக வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இதேபோல் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ள நிலையில், அங்கும் சில முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக தவக்கால தியான 14 திருத்தலங்கள் சிலுவை பாதை சந்திப்பு பயணங்கள் உள்ளிட்டவையும் ஆங்காங்கே ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

Tags : Manakkula Ganesha Temple ,
× RELATED ஆட்டையாம்பட்டியில் குப்பை...