×

கர்ப்பிணி மனைவியை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேருக்கு வலை

பண்ருட்டி, மார்ச் 17:    பண்ருட்டி அருகே கர்ப்பிணி மனைவியை தாக்கியதாக அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டி அருகே கட்டமுத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீத்தாராமன் மகன் கோபாலகிருஷ்ணன் (30). இவர் திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சிவசங்கரி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் மனைவி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்தபோது கோபாலகிருஷ்ணன், அவரது அண்ணன் தேசிங்கு, அண்ணி கற்பகவள்ளி, உறவினர் மஞ்சுளா ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவசங்கரியை அசிங்கமாக திட்டி கையால் தாக்கி எட்டி உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார், ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், தேசிங்கு, மஞ்சுளா, கற்பகவள்ளி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags : teachers ,government school teacher ,
× RELATED 5 லட்சம் ஏழை பீடித்தொழிலாளர்கள்