×

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

உளுந்தூர்பேட்டை, மார்ச் 17:  உளுந்தூர்பேட்டை வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி ஆய்வாளர் சரவணன், வட்டார கல்வி அலுவலர் மோகன் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருட்செல்வம் வரவேற்றார்.

இதில் 10 நபர்களுக்கு சக்கர நாற்காலிகள், 30க்கும் மேற்பட்டவர்களுக்கு காதொலி கருவி, சேர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் தேன்மொழி, அரசு, ராமலிங்கம், அய்னா, சரிதா, ஜானகிராமன் உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ceremony ,
× RELATED சீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..!