×

பஞ்சாயத்து ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், மார்ச் 17:  கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கதொட்டி ஊழியர்கள், துப்புரவு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையின்படி நிலுவையுடன் மாத ஊதியம் வழங்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் முத்துக்குமரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, பாலகிருஷ்ணன், புருஷோத்தமன், குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கள்ளக்குறிச்சி:     கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தினர்  கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட  தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் விஜயகுமார்,  மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட துணை தலைவர் ராஜசேகர் ஆகியோர் கண்டன  உரையாற்றினர். கிராம துப்புரவு ஊழியர்கள், தூய்மை காவலர்களை பணிநிரந்தரம்  செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம துப்புரவு ஊழியர்களுக்கு மாத  ஊதியம் ரூ.9320, தூய்மை காவலர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த மாத சம்பளம்  ரூ.6150 வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில்  நிர்வாகிகள் தெய்வீகன், அன்புதுரை, காமராஜ், குமார், முருகன்,  தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

Tags : Panchayat Employees Union ,demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்