×

கொரோனாவை தடுக்க அனைத்து துறையினரும் களமிறங்க வேண்டும்

விழுப்புரம், மார்ச் 17: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அனைத்து துறையினரும் களமிறங்க வேண்டுமென ஆட்சியர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். கிராமங்களில் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கவும், பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கைகள் மற்றும் முகங்களை அவ்வப்போது நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அலுவலக வளாகங்களில் எவரேனும் சிறிதளவு உடல் சோர்வு காய்ச்சல், தும்மல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளோடு தென்பட்டால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கிடவும், கோயிலுள்ள கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கவும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கால்நடைகளை பரிசோதனை செய்ய அணுகும்போது முககவசம் அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுத்திகரிப்பு திரவத்தினை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அன்னதானக்கூடங்கள் தங்கும் விடுதிகள், தியேட்டர்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் கொரோனா

Tags : departments ,
× RELATED கம்பம் நகராட்சி அலுவலகத்தில் அரிசி...