×

சிதம்பரம் அருகே பரபரப்பு மணல் லாரியை சிறைபிடித்த மக்கள்

சிதம்பரம், மார்ச் 17: சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தில் இருந்து திட்டுக்காட்டூர் செல்லும் வழியில் பழைய கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் இருந்து நேற்று 4 லாரிகளில் மணல் எடுக்கப்பட்டது. இதை பார்த்த பெராம்பட்டு கிராம மக்கள் திடீரென லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி பழைய கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு  ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசின் திட்டப் பணிகளுக்காகத்தான் மணல் எடுத்துச் செல்லப்படுவதாக விளக்கம் அளித்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chidambaram ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...