×

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்

பண்ருட்டி, மார்ச் 17:  பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட அண்ணாகிராமம் வட்டார காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் ஒறையூரில் வட்டார தலைவர் பிரேமாகேசவன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மங்கவரத்தாள், வட்டார துணைத்தலைவர் செந்தில், பொதுச்செயலாளர் முத்துவள்ளி, செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலுமணி, இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் வாழப்பாடி ராம.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஒறையூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமனம் செய்து இரவு நேரத்திலும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும். அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து ஒறையூரை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்திட வேண்டும். சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக கொய்யாபழம் விவசாயம் செய்கின்ற இப்பகுதியில் கொய்யாபழம் பதனிடும் தொழிற்சாலை மற்றும் கொய்யாபழச்சாறு தொழிற்சாலை அமைத்திட வேண்டும்.

அக்கடவல்லி பெண்ணையாற்றில் மீண்டும் மாட்டு வண்டி குவாரி அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் தர், அண்ணாகிராமம் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஏழுமலை, அமாவாசை, ராமசாமி, வேல்முருகன், விஸ்வலிங்கம், மாயகிருஷ்ணன், தனுசு, கிராம தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : state governments ,
× RELATED நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை...