×

1424 தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர், மார்ச் 17: கடலூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1,424 அரசு  தொடக்கப்பள்ளிகளுக்கும் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் எட்டாம் வகுப்பு வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டை அச்சுறுத்திய கொரோனா  வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வைரஸ் பரவாமல் தடுக்க ரயில், பஸ்களில் வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்வது மற்றும் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. சிறு குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தாக்குவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து கண்காணிக்கும் பொருட்டு குழந்தைகள் நலன் கருதி எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 1,424 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் எட்டாம் வகுப்பு வரையும் விடுமுறை அறிவித்துள்ளன. தொடர்ந்து பள்ளிகளில் உள்ள கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகங்கள் தூய்மையாக வைத்திருக்க கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுகாதாரமாக வைப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

Tags : Holidays ,Elementary Schools ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...