×

சரியான தொழில்நுட்பங்களை கடைபிடித்தால் பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 17: சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பொன்னங்கோவில் கிராமம். இக்கிராமத்தில் விருத்தாசலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மண்டல ஆராய்ச்சி மையம் மற்றும் கோயம்புத்தூர் நீர்நுட்ப மையம் ஆகியவற்றின் சார்பில் பயிர் வகை பயிர்களில் உயர் தொழில்நுட்பம் மற்றும் புழுதாக்குதல் கட்டுப்படுத்திடும் முறைகள் குறித்து விரிவான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.  

இதில் மண்டல ஆராய்ச்சி நிலையம் விருத்தாசலம் உழவியல் முனைவர் அரிசுதன் வரவேற்புரையாற்றினார். மண்டல ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் மோதிலால் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். பரதூர் ஊராட்சி மன்றத்தலைவர் நடராஜன், துணைத்தலைவர் ஆதிவாசு முன்னிலை வகித்தனர். பின்னர் நடைபெற்ற விவசாயிகளுக்கான புத்தாக்க பயிற்சியில் விவசாயிகள் ஒரே முறையிலான பயிர்சாகுபடியில் அதிகம் லாபம் இல்லை. சரியான தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து பயிர்வகை பயிர்களில் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறவேண்டும் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

அனைத்து விவசாயிகளும் தகுந்த காலத்தில் தவறாமல் கோடை உழவு அவசியம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மைத்துறை அதிகாரிகள் பயிரி பூச்சியியல் முனைவர் ஜெயபிரபாவதி, பயிர்நோயியல் உதவி பேராசிரியர் செந்தில்ராஜா மற்றும் கிராம விவசாயிகள் என பலரும் பங்கேற்றனர். இளநிலை ஆராய்ச்சியாளர் அனுப்பிரியா நன்றி கூறினார்.
   

Tags : pest attacks ,
× RELATED 26 ஆண்டுகளில் மிக மோசமான பயிர்...