×

கடலூர் அரிஸ்டோ சிபிஎஸ்இ பள்ளியில் மேல்நிலை வரை மாணவர்களுக்கு சிறந்த கல்வி

கடலூர் கம்மியம்பேட்டையில் இயங்கும் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை தக்க வைத்து கல்வித்துறையில் புரட்சி செய்து வருகிறது. தற்போது, கடலூர் நகரில் முதன் முறையாக சிபிஎஸ்இ மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தியது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் கெடிலம் ஆறு பைபாஸ் சாலையில் அமைதியான சுற்றுச்சூழலில் இயங்கும் இப்பள்ளியில் குழந்தைகளுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியுடன் கராத்தே, யோகா, விளையாட்டு போட்டிகள் திறமையான பயிற்சியாளர்களை கொண்டு கற்றுத்தரப்படுகிறது.

கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அதிகளவு மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அனுபவமிக்க திறமையான ஆசிரியர்களை கொண்டு சிபிஎஸ்இ கல்வி கற்றுத்தரப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. நூலகம், ஆய்வக வசதிகள் உள்ளது. அமைதியான சுற்றுச்சூழலில் பாதுகாப்பான கம்மியம்பேட்டை சாலையில் விசாலமான நிலப்பரப்பில் உள்ள இப்பள்ளி பெற்றோரை வெகுவாக கவர்ந்துள்ளது. மருத்துவம், நீட் தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளியின் வளர்ச்சிக்கு பள்ளி தலைவர் சிவக்குமார், தாளாளர் சொக்கலிங்கம், கஸ்தூரி சொக்கலிங்கம், நிர்வாக அதிகாரி சிவராஜ், முதல்வர் ஷெரின்பேகம் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆண்டுதோறும் இப்பள்ளி சாதனை படைத்து வருகிறது.  

இதுகுறித்து: பள்ளி தாளாளர் சிவகுமார் கூறியதாவது, மாணவர்களின் சிறந்த கல்விக்கு வழிகாட்டியாக கடலூர் மாநகரில் அரிஸ்டோ மற்றும் சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனங்கள் செயல்படுகிறது. அரிஸ்டோ சிபிஎஸ்இ மற்றும் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு அன்றாட பாட வகுப்புகளுடன் எதிர்காலத்தின் சிறப்பான வழிகாட்டுதலுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளுக்கு தயார் செய்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நடப்பு கல்வியாண்டில் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கடலூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் மாவட்டத்திலேயே முதன்மை இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு நெல்லிக்குப்பம் எடிபை பள்ளி எம.டி.என்.எடிபை எஜூகேஷன் பிரைவேட் லிட் நெல்லிக்குப்பம், கடலூரில் மீனாட்சி சண்முகம் எஜூகேஷனல் டிரஸ்ட் உடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு வழிவகுத்துள்ளது.

எடிபையின் நோக்கம் சிறந்த தலைவர்களை இந்த சமுதாயத்துக்கு உருவாக்கி கொடுப்பதாகும்.  இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தக் கூடியவர்களாகவும், கல்வித்தரத்தை உயர்த்தக்கூடிய அளவுக்கு தகுதி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். மாணவனிடம் கேள்வியை ஆராய்ந்து கேட்டு விடையை கண்டுபிடிக்க சொல்லும் போது, ஒரு புத்தகம் அல்லது வகுப்பறையை தாண்டி அந்த மாணவனின் கற்கும் திறனும், கற்றலின் ஆர்வமும் தூண்டப்படுகிறது.  மேலும் இங்கு பயிலும் மாணவர்கள் நுண்கலையின் மற்ற பள்ளிகளில் நடக்கும் போட்டிகள், பயிற்சி வகுப்புகள், தேசிய மற்றும் உலக அளவில் நடக்கும் தொழிற்பயிற்சி அரங்குகளிலும் பங்கு பெறக்கூடியவர்களாக திகழ்வார்கள். இதனால் அவர்களின் ஆளுமை திறன் வளர்க்கப்படுகிறது. எடிபை உலகத்தரம் வாய்ந்த கல்வியை உலகம் முழுவதும் 20 பள்ளிகளில் செயல்படுத்தி வருவதோடு மட்டும் இல்லாமல் 38 பள்ளிகளில் கல்வி முறையை தொடங்குவதற்குகான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஒரே இடத்தில் தரமான கல்வி, விளையாட்டு மற்றும் கலை ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் எடிபை பள்ளி வழங்குகிறது.

Tags : Cuddalore Aristo ,CBSE School ,
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...