×

ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மார்ச் 17: குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. சிஐடியு மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கணேசன் தலைமையிலும், மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி முன்னிலையில், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆயிரம் பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், ஊராட்சி ஓஹெச்டி ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய நிலுவைத் தொகை குறித்து ஊரக வளர்ச்சி இயக்குனர் மூலம் உத்தரவு வழங்க வேண்டும். தொட்டி சுத்தம் செய்ய மாதம் ஆயிரம் ரூபாய் அலவன்ஸ் வழங்க வேண்டும். வார விடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்க வேண்டும். ஓ.ஹெச்.டி ஆப்பரேட்டர் அனைவருக்கும் ஒரேவிதமான சம்பளம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். அடையாள அட்டை மற்றும் மாதாமாதம் சம்பளம் வழங்க வேண்டும். ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்

Tags : Government ,
× RELATED அலுவலகங்களில் கைகழுவ ஏற்பாடு...