×

வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் ஆபத்தான பட்டுப்போன மரம் வெட்டி அகற்றம்


வத்தலக்குண்டு, மார்ச் 17: வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் தினகரன் செய்தி எதிரொலியால் ஆபத்தான நிலையிலிருந்த பட்டுப்போன மரம் வெட்டி அகற்றப்பட்டது. வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு தினசரி 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு இரண்டு நீலகிரி தைல மரங்கள் பட்டுப்போய் நின்றன. பலத்த காற்றில் இப்ப விழுமோ எப்ப விழுமோ என்று அச்சுறுத்தி கொண்டிருந்தது. சமூக ஆர்வலர்கள் மற்றும் பலரின் விடாமுயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மரம் வெட்டப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது.

Tags : Removal ,Wattalakundu Government Hospital ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...