×

கொடைக்கானலில் மகளிர்தின விழா

கொடைக்கானல், மார்ச் 17: கொடைக்கானலில் டி.எம்.ஐ தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தினவிழா நடந்தது. கொடைக்கானலில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டிஎம்ஐ தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தினவிழா நடந்தது. முன்னதாக ஏரி சாலை பகுதியில் இருந்து பேரணியாக 7 ரோடு, அண்ணாசாலை வழியாக ஆதித்தனார் திருமண மண்டபம் வரை பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியை கீஸ் தொண்டு நிறுவன அமைப்பாளர் மோகன் கொடியசைத்து துவங்கிவைத்தார்.

திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆர்கே நகர் பங்குத்தந்தை பீட்டர் சகாயராஜ் தலைமை தாங்கினார். டிஎம்ஐ தலைவி சேவியர் செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் முத்துமாரி, அருட்சகோதரிகள் ரஞ்சிஸ் மேரி, பிலோ உட்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பு குறித்தும், சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் பேசப்பட்டது. அதனைதொடர்ந்து மலைவாழ் பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டனர்.

Tags : Women's Festival ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் மிரட்டும் காட்டு...