×

உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்வத்தலக்குண்டு, மார்ச் 17: நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டியில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவன பெண் தொழிலாளர்கள் கேக் வெட்டி உலக மகளிர் தினத்தை கொண்டாடினர். நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டியில் சைல்டு வாய்ஸ் தொண்டு நிறுவனம் சமுதாய நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் ரமணா ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் இணைந்து வண்ண பலூன்களை பறக்க விட்டும் கேக் வெட்டியும் உலக மகளிர் தினத்தை கொண்டாடினர். விழாவுக்கு ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். சைல்டு வாய்ஸ் நிறுவன மேலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். அனைவரும் கொரோனோ வைரஸை ஒழிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழாவில் சைல்டு வாய்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள், பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கணக்காளர் மனோ நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சைல்டு வாய்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ராணி, சிவநாகஜோதி, பிரின்சி, ஜெனிபர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : World Women's Day Celebration ,
× RELATED தேன்கனிக்கோட்டையில் உலக மகளிர் தின கொண்டாட்டம்