×

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கியில் இஸ்லாமியர்கள் பணம் எடுக்கும் போராட்டம்

திருப்பூர், மார்ச் 17: திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமை சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் நேற்று வங்கியில் இருந்து பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் திருப்பூர் அறிவொளி சாலையில் தொடர்ச்சியாக 31வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தனியார் வங்கி முன் திரண்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், குடியுரி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஒரு வங்கியில் பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்தகட்டமாக அனைத்து வங்கிகளிலும் பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

Tags : Islamists ,protest ,
× RELATED ரம்ஜான் பண்டிகை கொண்டாடும்...