×

பூங்கா இடத்தில் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மனு

தாராபுரம், மார்ச் 17:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கல்லூரி சாலையில் உள்ள கோகுலம் காலனியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அம்பிகா, செயலாளர் பால்ராஜ், பாக்கிய செல்வி உள்ளிட்டோர் கவுண்டச்சி புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமாரிடம் அளித்துள்ள மனு விவரம்:  கோகுலம் காலனி குடியிருப்பில் உள்ள 132 வீட்டு மனைகளில் 35 குடியிருப்புகள் உள்ளன. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்த இடத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் இரண்டு பூங்காக்களை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு பூங்காக்களின் இடம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது   இந்நிலையில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் குறிப்பிட்ட சிலர் தன்னிச்சையாக நுழைந்து அங்கு கோவிலை கட்டி கோவில் விரிவாக்கப் பணியை செய்யும் முயற்சியை எடுத்து வருகின்றனர். பல மதங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வசிக்கும்  இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கோயிலை ஏற்படுத்தி வருவது கோகுலம் காலனியின் பெரும்பான்மையான குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விருப்பமில்லை. இந்நிலையில் கோகுலம் காலனியில் சம்பந்தமே இல்லாத சிலரால் ஏற்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்க சீர்குலைவு முயற்சிக்கு தடைவிதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்காவை மட்டுமே அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். இதே மனு தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.

Tags : temple building ,park ,
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்