×

வயல் தினவிழாவில் ஆலோசனை ஒரத்தநாடு வேளாண்மை வட்டாரத்தில் 1,400 ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு

ஒரத்தநாடு, மார்ச் 17: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் தற்போது கோடை நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 1,400 ஏக்கர் பரப்பளவிலான கோடை நேரடி நெல் விதைப்பு சாகுபடி நடந்து வருகிறது. இந்த சாகுபடி மூலமாக ஏக்கருக்கு ரூ9,000 வரை சேமிப்பு செய்ய முடிகிறது. நேரடி நெல் விதைப்பில் நாற்றங்கால் தயாரித்தல், நடவு நடுதல் மிச்சமாகிறது. நிலத்தடி நீரை பாதுகாக்கவும், சாகுபடி செலவை குறைக்கவும் அதிக மகசூலை பெறவும் ஒரத்தநாடு வட்டாரத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் அதிகளவில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு வேளாண்மைத்துறை அதிகாரி செல்வராசு தெரிவித்துள்ளார்.

Tags : agriculture area ,
× RELATED வடசென்னையில் அதிகரிக்கும் கொரோனா...