×

பக்தர்கள் அச்சம் கஜா புயலால் பாதித்து 16 மாதங்களை கடந்தும் கயிறு தொழிற்சாலைகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை

பேராவூரணி, மார்ச் 17: பேராவூரணியில் கயிறு பொருட்கள் தொழிற்சாலை உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேராவூரணி பகுதியில் 75க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழிற்சாலையை நடத்தி வந்தனர். 5,000 குடும்பங்களுக்கு நேரடியாகவும், 3,000 குடும்பங்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து கடந்த 15 ஆண்டுகளாக கயிறு தொழில் இயங்கி வந்தது. இந்நிலையில் 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வீசிய கஜா புயலால் அனைத்து தொழிற்சாலைகளும் முழுமையாக பலத்த சேதமடைந்தது. சேத விபரங்கள் மாவட்ட தொழில் மையம் மூலமாகவும், வருவாய்த்துறை மூலமாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.
ஆனால் பல கோடி ரூபாயை இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கயிறு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.

இதனால் தொழிற்சாலையை சீரமைக்க முடியாமலும், தொடர்ந்து நடத்த முடியாமலும் இருக்கிறோம். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை தொடர்புடைய கயிறு தொழிற்சாலைகள், கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பையும், மத்திய, மாநில அரசுக்கு வரி வருவாயையும் ஈட்டி தந்துள்ளது. ஆனால் கயிறு தொழிற்சாலைகளின் இன்றைய நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து பரிசீலித்து, பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், வேலாயுதம், முத்து வைரவன், சுப்பிரமணியன், துரை அரசன், காஜா மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Pilgrims ,storm ,Kaja ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...