×

கும்பகோணம் உள்ளூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல்

கும்பகோணம், மார்ச் 17: கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த உள்ளூர், அம்மாசத்திரம் மற்றும் உமாமகேஸ்வரபுரம் ஆகிய ஊராட்சிகளில் சுமார் 3,300 ரேசன் அட்டைகள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலைகளை, உள்ளூர் ஊராட்சியில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்த நிலையில், உள்ளூர் ஊராட்சிக்கு நேற்றுமுன்தினம் வேட்டி சேலை வந்தது. அதனை நேற்று கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பொது மக்களுக்கு வழங்கினார்.இது குறித்து சண்முகம் என்பவர் கூறுகையில்,வருடந்தோறும் பொங்கல் விழாவன்று, ஏழைகள் முதல் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் வேட்டி, சேலைகளை வழங்கி விடுவார்கள்.இந்தாண்டு 3 மாதத்திற்கு பிறகு, பல்வேறு கோரிக்கை விடுத்த பின்னர் கொடுத்துள்ளனர். ஆனால் 3,300 ரேசன் கார்டுக்கு, 1,400 கார்டுகளுக்கு மட்டும் தான் வழங்கியுள்ளார்கள்.
மாவட்ட நிர்வாகம், இது குறித்து, உரிய விசாரணை செய்து, வழங்கப்படாமல் உள்ள அனைவருக்கும் வேட்டி சேலைகளை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Tags : public ,Kumbakonam ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...