×

ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு

பேராவூரணி, மார்ச் 17: பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினர்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பயிற்சி வகுப்பை பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தவமணி, சடையப்பன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் வரவேற்றார். பயிற்றுனர்கள் நடராஜன், சோபா ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் கடமைகள், உரிமைகள் குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் உறுப்பினர்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கர்ணன் நன்றி கூறினார்.

Tags : panchayat members ,
× RELATED காடையாம்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டம்