×

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கத்திக்குத்து

ஒரத்தநாடு, மார்ச் 17: ஒரத்தநாடு அருகே ஊராட்சி தலைவரின் கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. ஒரத்தநாடு தாலுகா காவராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபிரபா. இவர் அந்த கிராமத்தில் ஊராட்சி தலைவராக இருக்கிறார். நேற்று மாலை சந்திரபிரபாவின் கணவர் தேவேந்திரன் வீட்டில் இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கலைச்செல்வன் மகன் கார்த்திக் என்பவர் வந்து தேவேந்திரன் தலையில் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த தேவேந்திரன், ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர். தேவேந்திரன் தஞ்சை தெற்கு மாவட்ட தேமுதிக மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.

Tags : panchayat chief ,
× RELATED புதுச்சேரி சோலை நகர் பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை