×

குளக்கரை வீடுகளுக்கு பட்டா கேட்டு போராடிய 200 பேர் கைது

கோவை, மார்ச் 17:  கோவையில் குளக்கரை வீடுகளுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்திய 200 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை பூசாரிபாளையம் ரோடு முத்தண்ண குளக்கரையில் 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் வசிப்பவர்களை காலி செய்ய சொல்லி மாநகராட்சி நிர்வாகம், குடிசை மாற்று வாரியம் நோட்டீஸ் வழங்கியது. குளக்களை வீடுகளை இடித்து அகற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் குளக்கரையில் வசிக்கும் மக்கள் நேற்று அதே பகுதியில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி சி.பி.ஐ. எல்.எம். மாநில குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை ஆர்.எஸ்.புரம் போலீசார் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் தொடர்ந்து போராட்டம் நடந்தது. இதையடுத்து போலீசார் 87 பெண்கள் உட்பட 200 பேரை நேற்று மாலை கைது செய்தனர்.‘’40 ஆண்டுக்கும் மேலாக குளக்கரையில் மக்கள் வசிக்கிறார்கள். இங்கே அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. பொதுமக்களின் வீட்டை இடித்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இடமின்றி தவிப்பார்கள்’’ என போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் தெரிவித்தனர்.

Tags : houses ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...